தமிழ் நாடு அரசு
தமிழ் நாடு அரசு 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
தற்பொழுதைய ஆட்சியாளர்
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு கொனியேட்டி ரோசையா
, தற்பொழுதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா, தற்போதைய தலைமை நீதிபதி ராஜேஸ்குமார் அகர்வால்
தொகுதிகள் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
மின் ஆளுமை
தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக