சனி, 9 ஆகஸ்ட், 2014

கம்பர்

எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின்சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.
சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன் விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான்.

கம்பரின் சிறப்பு

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று. கம்பர் "கவிச்சக்கரவத்தி" என்றும் புகழப்படுகிறார்.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.

கம்பனின் காலம்

கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் உண்டு ஒட்டக்கூத்தன்சேக்கிழார் ஆகியோருக்கு அவன் சமகாலத்தவன் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினன் என்று உறுதியாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலின் பெயர் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக மாவிநோதம் என்பதுமூன்றாம் குலோத்துங்கனின் பட்டப் பெயர்களுள் ஒன்று. சீவக சிந்தாமணியின் எதிரொலியையும் கம்பன் காவியத்தில் பார்க்க முடிகிறது. எனவே இது சீவக சிந்தாமணியின் காலத்தை அடுத்தது கம்பனின் காலம் என்று சொல்லலாம்.
இராமாயணம் தவிர ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிக்கோவை(இப்போது மறைந்துவிட்டது) ஆகியவற்றை கம்பன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மும்மணிக் கோவையை விமர்சனம் செய்த வாணியந்தாதன், கம்பனின் கவிதையைத் தாக்கியுள்ளான். ஏரெழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவுத் தொழிலில் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கும் வேளாள மரபுக்கு ஏற்றம் தர எழுதப்பட்டவை. ஏரெழுபது ஒரு பேரவையில் படித்து அரங்கேற்றப்பட்டது. அவ்விழாவில் சடையன்(சடையப்ப வள்ளல்) மகன் சேதிராயன் பாம்பு கடியால் இறந்தான். உடனே, கம்பன் இரண்டு வெண்பாக்கள் பாடி உயிர்ப்பித்தான் என்றும் செவிவழிச் செய்தி உள்ளது.
இராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றிய போது, அங்குப் பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதப் பெருமாளை வேண்டி ஒரு அந்தாதியும் கம்பர் இயற்றினார். தன் பக்தர்களுள் பிரியமான சடகோபர் மீது 100 பாடல்கள் பாடவேண்டுமென்று திருவரங்கத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமான், கம்பனுக்கு கட்டளையிட்டாராம். சிற்றிலக்கியங்கள் சிறு நூல்கள் ஆகியவற்றை நாடறிந்த பெரும் புலவர்கள் இயற்றினார்கள் என்று சொல்லி அவற்றுக்கு பெருமை தேடுவது இந்திய இலக்கியங்களுக்கு பொதுவான மரபு. எனவே அவை கம்பனின் படைப்பு அல்ல என்ற கருத்தும் உள்ளது.

திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோயில்


திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் (ஆங்கிலம்:Avudaiyarkoil) இது இந்திய மாநிலமான தமிழ் நாடுபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தலைநகர் ஆகும்

இவ்வூரின் சிறப்பு

ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

ஆவுடையார் கோவில்

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

1100 ஆண்டுகளுக்கு முந்திய கோயில்

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

தேரின் சிறப்பு

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் காளையார்கோவில் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.
50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.
50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

வடக்கயிறு

இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும்.

உருவம் இல்லை - அருவம்தான்

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்கlil அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

அணையா நெருப்பு

6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

பாண்டியர் - சோழர் - நாயக்க மன்னர்கள் கட்டியது[

இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன.
இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது .

1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடி

இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய ஓலைச்சுவடிகளான திருவாசகம் திருக்கோவையார் ஓலைச்சுவடிகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தமிழகப் போர்ப் படைகள்

பண்டைய காலத்தில் தமிழகத்தில், தங்களுடைய நாட்டின் எல்லைகளையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்காக மன்னர்கள் படைகளை வைத்திருந்தனர். இப்படி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த படைகள்
  1. பல்தரப் படைகள்
  2. இருநிலைப் படை
  3. நான்கு வகைப் படை
  4. நான்கு வகுப்புப் படை
  5. ஐந்து உறுப்புப் படை
-என்று அதன் தரம், நிலை, வகை, வகுப்பு, உறுப்பு என்கிற பிரிவுகளின் கீழ் பிரிக்கப் பட்டிருந்தது.
இவை தவிர பண்டையப் படைகளை அதன் அடக்கத்தைக் கொண்டு
  1. பண்டைய படை வகுப்புப் பெயர்கள்
என்றும் 19 பிரிவுகளாகப் பிரித்து இருக்கின்றனர்.

பல்தரப் படைகள்

படைகளை அதனுடைய தர அடிப்படையில் பதினாறு விதமாகப் பிரித்துள்ளனர்.
  1. மூலப் படை
  2. உரிமைப் படை
  3. கூலிப் படை
  4. துணைப் படை
  5. அமயப் படை
  6. வன் படை
  7. பயிற்சிப் படை
  8. பயிற்சியில் படை
  9. குழுப் படை
  10. தனிப் படை
  11. கருவி பெறு படை
  12. தற்கருவிப் படை
  13. ஊர்திப் படை
  14. தன் ஊர்திப் படை
  15. கானப் படை
  16. பகைவிடு படை

மூலப்படை

தினமும் பயிற்சி செய்து கோண்டு நெடுங்காலமாக நிலைத்துள்ள சேனையை மூலப்படை என்பர்.

உரிமைப் படை

மான்யம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்தில் அரசனுக்காகப் போரிடும் சேனையை உரிமைப் படை என்பர்.

கூலிப் படை

போர்க்காலத்தில் மட்டும் கூலிக்காகப் பணியாற்றும் சேனையை கூலிப் படை என்பர்.

துணைப் படை

நட்பு காரணமாகப் போரில் உதவும் சேனையை துணைப் படை என்பர்.

அமயப் படை

அவசர நிலையில் சேர்க்கப்படும் சேனையை அமயப் படை என்பர். இது புதுப் படை என்பர்.

வன் படை

நாட்டுப் பற்றால் ஏற்பட்ட மன எழுச்சி காரணமாக அமையும் சேனையை வன் படை என்பர்.

பயிற்சிப் படை

போர்ப் பயிற்சி கற்ற சேனையை பயிற்சிப் படை என்பர்.

குழுப் படை

மன்னன் அமைத்த தலைவனை உடைய சேனையை குழுப் படை என்பர்.

தனிப் படை

தலைவன் இன்றித் தாமாகவே இயங்கும் சேனையை தனிப் படை என்பர்.

கருவி பெறு படை

அரசனால் வழங்கப்படும் போர்க் கருவிகளைப் பெற்று விளங்கும் சேனையை கருவி பெறு படை என்பர்.

தற்கருவிப் படை

தத்தம் போர்க் கருவிகளைக் கொண்டு போர் செய்யும் சேனை தற்கருவிப் படை என்று என்பர்.

ஊர்திப் படை

காவலனால் தரப்பட்ட வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை ஊர்திப் படை என்பர்.

தன் ஊர்திப் படை

தத்தம் வாகனங்களில் ஏறிப் போர் புரியும் சேனையை தன் ஊர்திப் படை என்பர்.

கானப் படை

வேடர் முதலிய வன மக்களைக் கொண்ட சேனையை கானப் படை என்பர்.

பகை விடு படை

பகைவனை விட்டு வந்து தானாகக் கூடிய சேனை பகை விடு படை என்பர்.

இருநிலைப் படை

படை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு
  1. அகப் படை
  2. மறப் படை
- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.

நான்கு வகைப் படை

படை அதன் வகையைப் பொறுத்து
  1. காலாள் படை - தனி நபராகப் போரிடும் படை
  2. பரிப் படை - குதிரைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
  3. யானைப் படை - யானைகளின் மேல் அமர்ந்து சென்று போரிடும் படை
  4. தேர்ப் படை - தேர்களில் அமர்ந்து சென்று போரிடும் படை
-என்று நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

நான்கு வகுப்புப் படை

படையை நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை
  1. அணி
  2. உண்டை
  3. ஒட்டு
  4. யூகம்

ஐந்து உறுப்புப் படை

படையினை ஐந்து உறுப்புகளாகக் கொண்டு பிரித்துள்ளனர். அவை
  1. தூசி
  2. கூழை
  3. நெற்றி
  4. கை
  5. அணி

பண்டைய படை வகுப்புப் பெயர்கள்

பண்டையப் படைகளை 19 பெயர்களில் பிரித்து அதன் அடக்கம், அவற்றில் தேர், யானை, குதிரை காலாள் எத்தனை இருக்க வேண்டும் என்று ஒரு கணக்கும் வைத்திருந்திருக்கின்றனர்.
எண்பெயர்அடக்கம்தேர்யானைகுதிரைகாலாள்
1பதாதி...1135
2சேனாமுகம்3 பதாதி33915
3குமுதம்3 சேனாமுகம்992745
4கணகம்3 குமுதம்272781135
5வாகினி3 கணகம்8181243405
6பிரளயம்3 வாகினி2432437291215
7சமுத்திரம்3 பிரளயம்72972921873645
8சங்கம்3 சமுத்திரம்21872187656110935
9அநீகம்3 சங்கம்656165611968332805
10அக்ரோணி3 அநீகம்19683196835904998415
11ஏகம்8 அக்ரோணி157464157464472392787320
12கோடி8 ஏகம்1259712125971237791366298560
13மாசங்கம்8 கோடி10077696100776963023308850388480
14விந்தம்8 மாசங்கம்8062156880621568241864704403107840
15மாகுமுதம்8 விந்தம்64497254464497254419349176323224862720
16பதுமம்8 மாகுமுதம்515978035251597803521547934105625798901760
17நாடு8 பதுமம்4127824281641278242816123834728448206391214080
18மாகடல்8 நாடு3302259425283302259425289906778275841651129712640
19வெள்ளம்8 மாகடல்26118075102242611807510224792542262067213209037701120

ஆதாரம்

முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் நூலின் பின் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப் பகுதியில் பக்கம் 9 முதல் 11 வரை.

வளரி

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளைசுழல்படைபடைவட்டம் என்றும் அழைத்தனர். இதனை ஆரம்பத்தில் முல்லை நில மக்கள் பயன்படுத்தினர். விலங்குகளை வேட்டையாடுவதற்கு இது பயன்பட்டது .முல்லை நில மக்களின் கடவுளான திருமால்,கண்ணன் போன்றோர் ஆயுதமாக சுதர்சன சக்கரம் பயன்படுத்தினர் சுதர்சன சக்கரம் என்பது வளரியே ஆகும்.




அமைப்பு

ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

எறியப்படும் முறைகள்

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டைமதுரைஇராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன.

சீனிவாச இராமானுஜன்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 221887 - ஏப்ரல் 261920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இராமானுஜனுடைய ஆய்வுக்குறிப்பேடுகள் ("நோட்புக்குகள்")

சிறுவன் இராமானுஜன் லோனியின் முக்கோணவியலையும் கார் என்பவருடைய தொகையையும் (Carr’s Synopsis) ஆர்வத்துடன் படித்துக் கொண்டிருந்தான். தூய கணிதத்தின் அடிமட்டத் தேற்றத் தொகை என்று பெயர்கொண்ட அந்தப்புத்தகம், சிறுவன் இராமானுஜனுடைய வாழ்க்கையில் வந்ததால் தனக்கென்று வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பெற்றுக் கொண்டது. அப்புத்தகத்தின் உட்பொருள் அவனை அப்படியே ஈர்த்து, அவனுடைய சக்திகளெல்லாவற்றையும் உசுப்பி விட்டது . அப்படியொன்றும் அது பெரிய நூலோ அல்லது பொருள் பொதிந்ததோ அல்ல. அதில் ஏறக்குறைய 6000 தேற்றங்கள் இருந்தன. பாதிக்கு சரியான நிறுவல்கள் இல்லை; இருந்தவையும் நிறைவற்றதாகவே இருந்தது. இராமானுஜனுக்கு இதெல்லாம் ஒரு தவிர்க்கமுடியாத, எனினும் சுவையான, சவாலாக அமைந்தன. அதிலிருந்த ஒவ்வொரு தேற்றத்திற்கும் சிறுவன் தன் மூளையில் தோன்றிய நிறுவல்களை ஒரு குறிப்பேட்டில் (நோட்புக்கில்) எழுதி வந்தான். இவ்வாய்வில் அவனுக்கே புதிய தேற்றங்களும் தோன்றத் தொடங்கின. எல்லாவற்றையும் எழுதினான். இப்படியே 16 வயதுக்குள் கணித இயலர் என்ற தகுதியை தனக்குள் அடைந்து விட்டான். ஆனால் அவனை உலகம் கணித இயலராகப் பார்க்க இன்னும் பத்து ஆண்டுகள் தேவைப்பட்டன.

1907-11 இல் படைப்பு வெள்ளம்

மோசமான உடல்நிலை காரணமாக கும்பகோணம் திரும்ப வேண்டியிருந்தபோது, தனது நோட்டு புத்தகங்களை தன் வகுப்புத் தோழரிடம் கொடுத்து, ஒருவேளை தான் இறந்து விட்டால், சிங்காரவேலு முதலியார் அல்லது எட்வர்டு பி.ரோஸ் (Edward B. Ross) அல்லது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜுக்கு கொடுத்துவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.ஆனால் அவனுடைய ‘நோட்புக்குகள்’ அவனை இழக்கவில்லை. சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் நூலகத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ். ஆர். ரங்கனாதன் எழுதுகிறார் (அவரே ஒரு கணித வல்லுனரும் கூட): “உள்ளிருந்து அவனை ஒரு ஜோதி ஊக்குவித்த வண்ணம் இருந்தது. கணித ஆய்வுகள் அவனுக்கு தெவிட்டாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. F.A.தேர்வு கூட தேறமுடிய வில்லையே என்ற ஏக்கம் அவனுடைய கணித ஊக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. வேலையில்லாமல் வளய வருவதும் அவனுடைய ஆய்வுகளின் தரத்தையோ அளவுகளையோ குறைக்கவில்லை. சூழ்நிலை, பொருளாதாரம், சமூக கௌரவம் ஒன்றும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. அவன் மனதிலும் கையிலும் இருந்ததெல்லாம் விந்தைச்சதுரங்கள் (Magic Squares) , தொடர் பின்னம்(Continued Fractions), பகா எண்களும் கலப்பு எண்களும் (Prime and Composite Numbers), எண் பிரிவினைகள் (Number Partitions), நீள்வட்டத் தொகையீடுகள்(Elliptic Integrals), மிகைப்பெருக்கத் தொடர் (hypergeometric series), இவையும், மற்றும் இவையொத்த மற்ற உயர்தர கணிதப்பொருள்கள் தாம். இவைகளைப் பற்றிய அவனுடைய கண்டுபிடிப்புகளை யெல்லாம் தன்னுடைய மூன்று நோட்புக்குகளில் எழுதினான். நிறுவல்கள் அநேகமாக எழுதப்படவில்லை. தற்காலத்தில் இந்த நோட்புக்குகளின் நகல்கள் (212, 352, 33 பக்கங்கள் கொண்டவை) டாடா அடிப்படை ஆய்வுக் கழகம்,சென்னைப்பல்கலைக் கழகம்ஸர் தோரப்ஜி டாடா அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளின் ஒத்துழைப்பினால் பிரசுரிக்கப் பட்டிருக்கின்றன. 1985இலிருந்து 2005 வரையில், ப்ரூஸ் பர்ண்ட் என்பவருடைய விரிவான குறிப்புகளுடன் ஐந்து புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. அவைகளில் 3542 தேற்றங்கள் இருக்கின்றனவென்றும், ஏறக்குறைய 2000க்கும் மேற்பட்ட தேற்றங்கள் அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னால் கணித உலகிற்குத் தெரியாத தேற்றங்கள் தான் என்றும் சொல்கிறார் ப்ரூஸ் பர்ண்ட்