புதன், 16 ஜூலை, 2014

தமிழ் நாடு அரசு 


தமிழ் நாடு அரசு 1986 வரை தமிழ் நாடு அரசு ஈரவைகள் கொண்ட (சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை) அரசாக செயல்பட்டது. அதன் பின் இன்று ஒரவையான சட்டமன்றத்தை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
ஆளுநர், தமிழக அரசிற்கான இந்திய அரசியலமைப்புத் தலைவராகச் செயலாற்றுகிறார். தமிழக முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனைகளின் பேரில் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். நீதித்துறை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கீழ் இயங்குகின்றது.
தற்பொழுதைய ஆட்சியாளர்
தமிழகத்தின் தற்போதைய ஆளுநர் மேதகு கொனியேட்டி ரோசையா
, தற்பொழுதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா, தற்போதைய தலைமை நீதிபதி ராஜேஸ்குமார் அகர்வால்
தொகுதிகள் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட 234 சட்டசபைத் தொகுதிகளாக, 39 மக்களவைத் தொகுதிகளாக உள்ளன. தமிழக அரசு 31 மாவட்டங்களையும், 10 மாநகராட்சிகளையும், 149 நகராட்சிகளையும், 561 பேரூராட்சிகளையும், 12,618 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
மின் ஆளுமை
தமிழ் நாடு மாநிலம் மின் ஆளுமையை அறிமுகப்படுத்தியன் விளைவாக மற்ற மாநிலங்களிலிருந்து விலகி முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது அரசு பதிவேடுகள், நிலப்பதிவு, பட்டா போன்றவைகளை அனைத்து கிராம, நகர, சார் பதிவாளர் அலுவலகங்களில் கணிணி மயமாக்கலின் மூலம் அனைவரும் எளிதில் மற்றும் துரிதமாக பயன்பெரும் விதமாக, அரசின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் விதமாக மாற்றப்பட்டதில் தமிழக அரசுக்கு பெரும் பங்கு உண்டு.
2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தன் தோழமைக் கட்சியான தேமுதிகவுடன் சேர்ந்துதிமுகவை வெற்றிபெற்றதன் விளைவாக தற்பொழுது ஆட்சி நடத்துகின்றது.

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ளவற்றில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை வணக்கக் கூட்டம் ஆகியவற்றின் துவக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில் பாடப்படும்.

தமிழகத்தில்

தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்வாழ்த்து வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார் என்பவராவார். இவர் எழுதிய புகழ்பெற்ற நாடக நூலான மனோன்மணியம் நூலில் உள்ள துதிப்பாடலின் ஒரு பகுதி இப்பாடலாகும்.
ஆரியம் போல தமிழ் உலகவழக்கழிந்து சிதையவில்லை என்று கூறும் வரிகள் தள்ளப்பட்டு தமிழ்த்தாயைப் புகழும் வகையில் அமைந்த வரிகள் மட்டும் ஏற்கப்பட்டுள்ளன. இதை 1970ஆம் ஆண்டு தமிழக அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

இப்பாடல் சுந்தரனார் இயற்றிய பாடலின் திருத்தமேயாகும். அவர் எழுதிய மெய்ப்பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இப் பாடலின் பொருள், நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு, அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில், தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும், அதிலிட்ட மணம் வீசும் திலகமாகவும் இருக்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல, அனைத்துலகமும் இன்பம்பெறும் வகையில் எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே! இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!


"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் -

தமிழ்நாடு மாநிலத்தின் அடையாளங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

பகுப்புபெயர்அடையாளம்
அரசுதமிழ்நாடு அரசின் சின்னம்
TamilNadu Logo.svg
மொழிதமிழ்
விலங்குவரையாடு
Niltahr.jpg
பறவைமரகதப்புறா
Emerald dove444.jpg
மலர்காந்தள்
Gloriosa Superba.jpg
மரம்பனை மரம்
Palm Tamil Nadu.jpg
பழம்பலா
Artocarpus heterophyllus fruits at tree.jpg
பண்தமிழ்த்தாய் வாழ்த்து
விளையாட்டுசடுகுடு
Kabaddi.jpg
நடனம்பரதநாட்டியம்
Bharatanatyam male.jpg